/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குவைத் சிறையில் வாடும் 4 பேரை மீட்க கோரி கடலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
/
குவைத் சிறையில் வாடும் 4 பேரை மீட்க கோரி கடலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
குவைத் சிறையில் வாடும் 4 பேரை மீட்க கோரி கடலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
குவைத் சிறையில் வாடும் 4 பேரை மீட்க கோரி கடலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 06, 2024 12:35 AM

ஆர்.எஸ்.மங்கலம், : குவைத் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நான்கு மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணையில் மீனவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோர்ப்பண்ணை முனீஸ்வரன் மகன் சந்துரு 25, திருப்பாலைக்குடி ஜான் மகன் சேசு 45, முத்து மகன் கார்த்திக் 25, பாசிப்பட்டணம் செல்வராஜ் மகன் வினோத்குமார் 27, ஆகியோர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு மீன்பிடித் தொழில் செய்ய சென்றனர்.
அங்கு படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, குவைத் நாட்டு கடற்படையினர் அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய படகில் போதைப்பொருள் இருந்ததாக கூறி 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களது உறவினர்கள் சார்பில் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு வரை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வலியுறுத்தியும் நேற்று மோர்ப்பண்ணை கடலுக்குள் இறங்கி மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, கிராம தலைவர் ராஜதுரை, மீனவர்கள் பலர் பங்கேற்றனர்.