/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
10ம் நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்
/
10ம் நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்
ADDED : மார் 06, 2025 01:23 AM

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் மீனவர்கள் பத்தாம் நாளாக மீன்பிடிக்க செல்லாததால் மீன் வர்த்தகம் பாதித்தது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்., 24 முதல் வேலை நிறுத்தம் செய்தனர். ராமேஸ்வரத்தில் 700 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.
தங்கச்சிமடத்தில் பிப்., 28 முதல் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு நிவாரணத் தொகையை உயர்த்தி அறிவித்ததையடுத்து, நேற்று முன்தினம் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், மீன்பிடி நாளான நேற்று கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து 10ம் நாளாக நேற்றும் படகுகளை கரையில் நிறுத்தி இருந்தனர். இதனால் கோவை, கேரளா மார்க்கெட்டுக்கு மீன்கள் அனுப்ப முடியாமல் பல லட்ச ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.