/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்கள் தீக்குளிப்பு: போராட்டம் வாபஸ்
/
மீனவர்கள் தீக்குளிப்பு: போராட்டம் வாபஸ்
UPDATED : மார் 05, 2025 10:00 AM
ADDED : மார் 05, 2025 12:16 AM

ராமேஸ்வரம்; இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்., 24 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கச்சிமடத்தில் பிப்., 28 முதல் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உண்ணாவிரதம், காத்திருப்பு, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களிடம் நடத்திய சமரச பேச்சு தோல்வி அடைந்தது.
அன்றிரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த படகிற்கு, 6 லட்சத்திற்கு பதில், 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், மீனவர்கள் சிறையில் உள்ள நாளில் ஒரு நாளைக்கு, 350 ரூபாய்க்கு பதிலாக, 500 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
ஐந்தாம் நாளான நேற்று மீனவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்த தீக்குளிப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தொடர்ந்து நடந்த காத்திருப்பு போராட்டத்தையும் நேற்று மாலை வாபஸ் பெற்றனர்.