தடை செய்த விளக்கில் மீன்பிடிப்பு ஜெனரேட்டர், வலைகள் பறிமுதல்
தடை செய்த விளக்கில் மீன்பிடிப்பு ஜெனரேட்டர், வலைகள் பறிமுதல்
ADDED : ஜூலை 08, 2026 04:51 PM
தொண்டி: தொண்டி கடலில் தடை செய்யப்பட்ட விளக்கு வெளிச்சத்தில் மீன்பிடித்த லைட்டுகள், ஜெனரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேவிபட்டினம் முதல் தொண்டி வரையிலான வடக்கு எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மின் விளக்குகளை பயன்படுத்தி சில மீனவர்கள் சட்ட விரோதமாக மீன் பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தொண்டி மீன்வள ஆய்வாளர் அபுதாகிர், கடல்சார் அமலாக்கப் பிரிவு ஏட்டு கருணாமூர்த்தி, கடலோர பாதுகாப்பு குழும ஏட்டு சரவணபாண்டி, போலீசார் மருதுபாண்டி, தங்கமுருகன், கடல்பாசி தொழில் நுட்ப உதவியாளர் வெற்றிச்செல்வன் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தொண்டி அருகே புதுக்குடி பகுதியில் 3 படகுகளில் 19 மின் விளக்குகள், 3 ஜெனரேட்டர்கள், 3 வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
–
