ADDED : ஜூன் 01, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே, பாரனுார் மகா சக்தி மாசாணி அம்மன், மயான காளி அம்மன் கோயில் 10 ஆம் ஆண்டு பூ குண்டம் விழா, மே 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று முதல் தினமும் பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. விழாவில் மயான பூஜை, பால்குடம் , தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய விழாவான பூக்குண்டம் இறங்கும் விழா நேற்று நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
