/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காலமுறை ஊதியம் வழங்குங்க சத்துணவு ஊழியர் கோரிக்கை
/
காலமுறை ஊதியம் வழங்குங்க சத்துணவு ஊழியர் கோரிக்கை
ADDED : ஆக 27, 2024 06:09 AM

ராமநாதபுரம், : தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன், மாநில துணைத் தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
இதில் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான காலைமுறை ஊதியம், குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். முதல்வரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.
அரசு காலி பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
ராமநாதபுரம், பரமக்குடி, போகலுார் உள்ளிட்ட ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.