ADDED : ஜூன் 25, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம்நடந்தது.
மாவட்ட தலைவர் சகாயதமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணேசன், மாநில துணைத் தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணி வழங்க வேண்டும்.ஒய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைளை வலியுறுத்தினர்.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், அரசு ஊழியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். சங்க மாவட்ட பொருளாளர் அம்பிராஜ் நன்றி கூறினார்.