/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 10:52 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், சமூக தணிக்ககையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் நாகராணி தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராணி, பொருளாளர் லட்சுமி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராணி, மாவட்டத் துணைத்தலைவர் அன்ன கல்யாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சியாமளா தேவி, ஒன்றிய துணை செயலாளர் மணிமேகலை, கவுரவத்தலைவர் சிவராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் சமூகத்தணிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். தணிக்கை என்ற பெயரில் ஆய்வுகள் செய்வதை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமையலர் இல்லாத மையச்சாவியினை அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்தல், பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் அம்பிராஜ் நன்றி கூறினார்.