/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரும்பு கருவிகள் தயாரிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள்
/
இரும்பு கருவிகள் தயாரிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள்
இரும்பு கருவிகள் தயாரிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள்
இரும்பு கருவிகள் தயாரிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள்
ADDED : பிப் 22, 2025 06:49 AM

ஆர்.எஸ்.மங்கலம்: இரும்பு வேளாண் கருவிகள் செய்யும் தொழிலில் வெளி மாநில தொழிலாளர்கள் முகாமிட்டு மிகுந்த தரத்துடன் தயார்செய்து கொடுப்பதால் அதை வாங்குவதில் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களான பீகார், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் கட்டுமான தொழில், விவசாயம், மில் ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இரும்பை வெப்பத்தில்சூடேற்றி பொதுமக்களுக்கு தேவையான அரிவாள், கத்தி, கோடாரி, கடப்பாரை உள்ளிட்ட பல்வேறு வேளாண் கருவிகளை பொதுமக்கள் விரும்பும் வடிவத்திலும், விரும்பும் தரத்திலும் உடனுக்குடன் தயார் செய்து கொடுப்பதில் வெளி மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பம் குடும்பமாக முகாமிட்டுள்ளனர்.
இந்த வகையில் தயார் செய்து கொடுக்கப்படும் அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் மிகுந்த தரத்துடனும், விலை குறைவாகவும் கிடைப்பதால் வெளி மாநில தொழிலாளர்கள் தயார் செய்யும் இரும்பு கருவிகளை விவசாயிகள் ஆர்வமுடன் விலை கொடுத்து வாங்குகின்றனர்.

