/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் அமைச்சர் பேச்சு: பா.ஜ.,கண்டனம்
/
முன்னாள் அமைச்சர் பேச்சு: பா.ஜ.,கண்டனம்
ADDED : ஆக 15, 2024 04:10 AM
ராமநாதபுரம் : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேச்சுக்கு ராமநாதபுரம் பா.ஜ., மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
மதுரை அருகே சமயநல்லுாரில் நடந்த அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசுகையில் பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலையை தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளில் பொது வெளியில் மேடையில் ஒருமையிலும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
மக்கள் மதிக்கின்ற அரசியல் தலைவரை ஏக வசனத்தில் பேசியதோடு அல்லாமல் குறிப்பிட்ட ஜாதி மக்களை புண்படுத்தும் வகையில் பேசியிருப்பதால் செல்லுார் ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அ.தி.மு.க., தலைமை அவரை அழைத்து கண்டிக்க வேண்டும்.
போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.