/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் முன்னாள் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு

ADDED : மார் 01, 2025 02:58 AM
ராமநாதபுரம்: -வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன்னாள் ஊழியர் சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் சந்திரன் 75. இவர் பணிபுரிந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வந்தது.
அவரது சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சந்திரன் 1989 ஜன.,1 முதல் 1999 பிப்.,28 வரை 21 லட்சத்து 70 ஆயிரத்து 793 ரூபாய் வரை சொத்து சேர்த்தது தெரிய வந்தது. இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2003 ல் சந்திரன் மீது வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. நீதிபதி மோகன்ராம் விசாரித்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சந்திரனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.