ADDED : மே 02, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் அப்துல் கலாம் அறக்கட்டளை திறப்பு விழா நடந்தது. அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பெண்கள் தையல் பயிற்சி பள்ளி மற்றும் சமூக சேவைகள் குறித்த துவக்க விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கஜேந்திரமாலா முன்னிலை வகித்தார். அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் விக்னேஷ் வரவேற்றார். ஏ.பி.ஜே., உதவும் கரங்கள் நிறுவனர் சமூக சேவகர் சாகுல் ஹமீது, திருப்புல்லாணி ஆனந்தன், விவசாய சங்க தாலுகா பொறுப்பாளர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். தையல் ஆசிரியர் சாந்தா நன்றி கூறினார்.

