ADDED : மார் 28, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி.டி. விநாயகர் பள்ளி, கேணிக்கரை வேதா அறக்கட்டளை, அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தினர். அறக்கட்டளை நிறுவனர் வீரமூர்த்தி தலைமை வகித்தார். கோல்டன் லயன்ஸ் கிளப் தலைவர் அபர்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஜோதிடர் நலச்சங்கத்தலைவர் கதிர் கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் குழுவினர் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து ஆலோசனைகள் வழங்கினர். 218 பேர் பங்கேற்ற முகாமில் 175 பேருக்கு பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்காக 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

