/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம்
/
குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம்
ADDED : செப் 01, 2024 04:47 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் அமிர்தா விஷ்வ வித்யாபீடம் வளாகத்தில் கொச்சி அமிர்தா மருத்துவமனை, ஜெனிசிஸ் அறக்கட்டளை, எச்.டி.எப்.சி., ஏர்கோ சார்பில் குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
முகாமை பிரம்மச்சாரினி லட்சுமி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பாலவேல்முருகன் வரவேற்றார்.
கொச்சி அமிர்தா மருத்துவக்கல்லுாரி குழந்தைகள் இதய மருத்துவத்துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் முகாம் நடந்தது. டாக்டர்கள் பாலாஜி ஸ்ரீமுருகன், ப்ரிஜேஷ் பி.கோட்டாயில், பாலகணேஷ், நிஷாந்த் ஆகியோர் குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.
இதில் இதய அறுவை சிகிச்சை, அல்லது பிற சிகிச்சைகள் தேவைப்படும் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு கொச்சி அமிர்தா மருத்துவமனையில் இலவசமாக இந்த சேவைகளை பெறுவார்கள். இந்த முகாம் மாதா அமிர்தானந்தமயி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதி.
தமிழகத்தில் நடத்தப்படும் 10வது முகாம் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.