/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலவச மனைப் பட்டா: தாசில்தாருக்கு பாராட்டு
/
இலவச மனைப் பட்டா: தாசில்தாருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 02, 2024 06:07 AM

கமுதி : கமுதி தாலுகாவைச் சேர்ந்த 61 மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய தாசில்தார் சேதுராமன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் உட்பட மாற்றுத்திறனாளிகள் பலரும் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி அதற்கான முயற்சியில் கமுதி தாசில்தார் சேதுராமன் ஈடுபட்டார்.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவின் பேரில் கமுதி தாலுகாவை சேர்ந்த 61 மாற்றுத் திறனாளிகளுக்கு நாராயணபுரம் கிராமம் அருகே தலா 2 சென்ட் இடம் ஒதுக்கி வீட்டுமனை பட்டா வழங்க தாசில்தார் சேதுராமன் உத்தரவிட்டார்.
நீண்ட நாள் கோரிக்கை நிறவேறியதால் கமுதி தாலுகா அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் முத்துராமலிங்கம், வட்டத் தலைவர் சந்திரன், செயலாளர் ஸ்டாலின் நல்லுசாமி முன்னிலை வகித்தனர்.
விழாவில் கமுதி தாசில்தார் சேதுராமன், துணை தாசில்தார் வேலவன், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட வருவாய் அலுவலக பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குருசாமி நன்றி கூறினார்.