/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினத்தில் இலவச மருத்துவ முகாம்
/
பெரியபட்டினத்தில் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 02, 2024 06:10 AM
பெரியபட்டினம் : பெரியபட்டினம் எஸ்.டி.பி.ஐ., கட்சி மற்றும் நடராஜ் கார்டியோ கேர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் சமுதாயக் கூடத்தில் நடந்தது.
பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் ரியாஸ்கான் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் அசன் அலி, நகர் தலைவர் நசீர், செயலாளர் இஜாஸ், செயற்குழு உறுப்பினர் அக்சன், நிர்வாகிகள் பீர் முகைதீன், இமாம் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
டாக்டர் ஜோதி முருகன் நடராஜன் தலைமையில் மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. இருதயம் சம்பந்தப்பட்ட நோய், கொலஸ்ட்ரால் பரிசோதனை, சர்க்கரை அளவு உள்ளிட்டவைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.