ADDED : மார் 26, 2024 11:39 PM

அ நிறம் | அளவு
திருப்புல்லாணி : -திருப்புல்லாணியில் வாப்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சி.எம்.எஸ்., பவுண்டேஷன் சார்பில் திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
தண்டரேந்தல், வளையனேந்தல், பள்ளப்பச்சேரி, பள்ளமோர்குளம், திருப்புல்லாணி, கீழக்கரை, பொக்கரனேந்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பெண்கள் இலவச தையல் பயிற்சியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஏற்பாடுகளை வாப்ஸ் தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
