/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிறவியில் இருதய குறைபாடுள்ள 28 குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
/
பிறவியில் இருதய குறைபாடுள்ள 28 குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
பிறவியில் இருதய குறைபாடுள்ள 28 குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
பிறவியில் இருதய குறைபாடுள்ள 28 குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
ADDED : மே 28, 2024 06:29 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்து முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கொச்சி அமிர்தா மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளில் 31 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 28 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் நடந்தது. மற்ற 3 குழந்தைகள் தொடர் சிகிச்சையில் சரி செய்யப்பட்டது.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பாலாஜி ஸ்ரீமுருகன், மடத்தின் நிர்வாகிகள் நிகிலேஷாமிருத சைதன்யா மற்றும் லட்சுமி ஆகியோர் கூறியதாவது:
ராமநாதபுரத்தில் உள்ள அமிர்தா வித்யாலயாவில் 2023 டிச.3ல் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் இருதய நோய் கண்டறியப்பட்ட 28 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
துாத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்ற இந்த முகாமில் சுமார் 300 குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதய நோய்க்கான அடையாளம் காணப்பட்ட 31 குழந்தைகளில் 28 குழந்தைகள் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டனர்.
இவர்களில் 16 பேர் அறுவை சிகிச்சைக்கும், 12 பேர் மற்ற சிகிச்சை நடைமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அறுவை சிகிச்சை தேவையில்லாத மூன்று குழந்தைகள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு வீடு திரும்பினர்.
இருதய நோய் பாதிப்புகளைக் கண்டறிய, 2024 ஜூன் மாதம் நாகர்கோவிலில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.