தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைப்பு: பொதுமக்கள் அவதி

குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைப்பு: பொதுமக்கள் அவதி

குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைப்பு: பொதுமக்கள் அவதி


ADDED : ஜூலை 06, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைப்பதால் குடியிருப்புவாசிகள் அவதியடைகின்றனர். இதனை தடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர். 

மாதர் சங்கம் தலைவர் கவுரி கூறியதாவது: ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதன் அருகே உள்ள ராமநாதபுரம் நகராட்சி குப்பைக் கிடங்கில் தொடர்ந்து தீ வைப்பதால் 3 கி.மீ., சுற்றளவுக்கு புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வாழும் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குடியிருப்பில் கழிவு நீர் அகற்றம், தெருவசதி, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இதன் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றார். –––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us