/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி
/
முதுகுளத்துாரில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி
ADDED : ஜூலை 16, 2024 05:44 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு முதுகுளத்துார் துணை மின்நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது.
முதுகுளத்துார் பேரூராட்சி பஜார் தெரு, கீழரத விதி, செல்லிஅம்மன் கோயில் தெரு உட்பட பல தெருக்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்று அறிவிக்கப்படாத மின் தடையால் இரவு முழுவதும் மின்சப்ளை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
எந்த முன்னறிவிப்பும் இன்றி மின்தடை ஏற்படுவதால் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே முறையாக அறிவிப்பு செய்து மின்தடை செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.