/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அகத்தியர் கோயிலில் பவுர்ணமி பூஜை
/
அகத்தியர் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED : மார் 25, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : கீழக்கரை அருகே தென்பொதிகை தமிழ் மாமுனிவர் அகத்தியர் கோயில் உள்ளது. பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் அகத்தியருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
நேற்று மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை கோயில் வளாகத்தில் யாக வேள்வி வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க உலக நன்மைக்கான சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகத்தியர் கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

