/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிடாரிசேரி கிராமத்திற்கும் கஞ்சா வந்து விட்டது: முன்னாள் எம்.எல்.ஏ., சதன்பிரபாகரன் காட்டம்

ADDED : ஏப் 01, 2024 10:04 PM
பரமக்குடி : ராமநாதபுரம் லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் பரமக்குடி, நயினார்கோவில் ஒன்றிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
மாவட்டச் செயலாளர் முனியசாமி பேசுகையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ்கனி 5 ஆண்டுகளில் எந்த சாதனையும் செய்யவில்லை. தொகுதிக்கு வரவில்லை. மாறாக தனது தொழிலை பெருக்க மட்டுமே தேர்தலில் நிற்கின்றார். மேலும் ஒருவர் சுயேச்சையில் போட்டியிடுகிறார். அனைத்து மக்களின் கஷ்டங்களை தெரிந்த ஜெயபெருமாளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன் பேசுகையில், கொரோனா காலத்தில் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது உதவிகளை செய்துள்ளேன். மதுரையில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த கஞ்சா இன்று பிடாரிசேரி கிராமம் வரை கிடைப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே மதுவால் பாதித்துள்ள இளைஞர்கள் உள்ளிட்டோர் காஞ்சாவால் பாதிக்கும் நிலையில் டூவீலர் விபத்துக்களிலும் மரணம் அதிகரித்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெ., ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் கூறுகிறோம். தி.மு.க.,வினர் கருணாநிதி ஆட்சி என எந்த சாதனையையும் சொல்ல முடியாமல் திராவிட மாடல் என்கின்றனர்.