/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி தாலுகா, நீதிமன்ற அலுவலக ரோட்டில் கொட்டப்படும் குப்பை
/
பரமக்குடி தாலுகா, நீதிமன்ற அலுவலக ரோட்டில் கொட்டப்படும் குப்பை
பரமக்குடி தாலுகா, நீதிமன்ற அலுவலக ரோட்டில் கொட்டப்படும் குப்பை
பரமக்குடி தாலுகா, நீதிமன்ற அலுவலக ரோட்டில் கொட்டப்படும் குப்பை
ADDED : மே 23, 2024 03:06 AM

பரமக்குடி: - பரமக்குடி தாலுகா அலுவலகம் மற்றும் நீதிமன்ற அலுவலகத்திற்கு இடையில் உள்ள ரோட்டில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரமற்ற சூழல் உள்ளது.
பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட காம்பவுண்ட் சுவரையொட்டி போஸ்ட் ஆபீசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இதன் அருகில் தாலுகா அலுவலக கேட் இருக்கிறது. பராமரிக்கப்படாத இப்பகுதியில் கேட் முற்றிலும் சேதமடைந்து வீணாகி உள்ளது.
இங்கு பயன்படுத்தப்பட்ட பழைய பேப்பர்கள், பொருட்களை வைக்கும் அறை உள்ளது. தேர்தலுக்கு தேவையான பொருட்களை பயன்படுத்திய பின் இந்த அறையில் வைப்பது வழக்கம். இதே போல் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக காம்பவுண்ட் சுவரையொட்டி ரோடு செல்கிறது. இந்த இரண்டு அலுவலகத்திற்கு இடைப்பட்ட ரோட்டில் பல மாதங்களாக குப்பை கொட்டுகின்றனர். இதன் வழியாக ஒவ்வொரு நாளும் நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதாரமற்ற சூழலால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.