/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டு வளாகத்தில் குப்பையால் சுகாதாரக்கேடு

ADDED : மே 04, 2024 04:52 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு வார்டில் முகப்பு கண்ணாடி இடைவெளியில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப் படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் அவசர சிகிச்சை, மகப்பேறு வார்டு நுழைவுப்பகுதியில் கட்டடத்தின் முன்பகுதியில் வண்ண கண்ணாடிகள் பொருத்தி அழகுபடுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பராமரிக்காததால் வார்டுகளுக்கு செல்லும் சிலர் கண்ணாடியின் உள்பக்க இடைவெளியில் பிளாஸ்டிக் பாட்டில், கப், பாலிதீன் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை ஏனோ மருத்துவமனை நிர்வாகம் கண்டும் காணாதது போல உள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே மகப்பேறு வார்டு கட்டடம் முகப்பு கண்ணாடி இடைவெளியில் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும். மீண்டும் குப்பை கொட்டாத வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.