/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் குப்பை குவியல் துர்நாற்றம்: சுற்றுலா பயணிகள் அவதி பாம்பன் பாலத்தில் குப்பை குவியல்: சுற்றுலா பயணிகள் அவதி

ADDED : ஜூலை 01, 2024 06:24 AM

ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் குப்பை குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேட்டால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இப்பாலத்தில் நின்றபடி சுற்றுலாப் பயணிகள் கடல் அழகு, ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகளை கண்டு ரசிப்பார்கள்.
ஆனால் பாலத்தில் எங்கு பார்த்தாலும் பாலிதீன் பைகள், குப்பை குவிந்து கிடக்கிறது.
மேலும் சில நாள்களுக்கு முன்பு பாலத்தில் சேதமடைந்த மின்கேபிளை ஊழியர்கள் சரி செய்த நிலையில், இதன் ரப்பர் கழிவுகளை சாலை ஓரத்தில் போட்டு விட்டு சென்றனர்.
இதனால் பாலம் சுகாதாரத் கேட்டால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே பாலத்தில் சுகாதாரம் பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை துறையோ அல்லது ஊராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.