/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினத்தில் தேங்கும் குப்பையால் சுகாதாரக்கேடு; அடிப்படை வசதிகளை செய்யுங்க ஆபீசர்

ADDED : பிப் 22, 2025 10:37 PM
பெரியபட்டினம் : பெரியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருவாரியாக குப்பை தேங்கியுள்ளதால் உடனுக்குடன் அகற்ற வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியபட்டினம் ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள நகர் பகுதிகளில் குப்பை வாரக்கணக்கில் அள்ளப்படாமல் சாலையோரங்களில் குவிக்கப்பட்டுள்ளது.
முன்பு பெரியபட்டினம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டிராக்டர்களில் குப்பை உடனுக்குடன் அகற்றப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக குப்பை தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
பெரியபட்டினம் எஸ்.டி.பி.ஐ., சட்டசபை தொகுதி தலைவர் பீர் மைதீன் கூறியதாவது:
பெரியபட்டினம் ஊராட்சியில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அள்ளுவதற்கான டிராக்டர் பயன்பாடில்லாமல் முடங்கியுள்ளது. ஊராட்சியில் பெருவாரியான குடிநீர் பைப்புகள் சேதமடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. அதனை பழுது பார்த்து நிவர்த்தி செய்வதற்கு கூட முறையான அலுவலர்களின் வழிகாட்டுதல் இல்லை.
தெருக்களில் மின் விளக்குகள் எரியாமல் பல இடங்களில் காட்சி பொருளாக உள்ளது.
எனவே பொதுமக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு தனி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.