/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உழவர்சந்தை அருகே குவியும் குப்பை: அகற்ற வலியுறுத்தல்
/
உழவர்சந்தை அருகே குவியும் குப்பை: அகற்ற வலியுறுத்தல்
உழவர்சந்தை அருகே குவியும் குப்பை: அகற்ற வலியுறுத்தல்
உழவர்சந்தை அருகே குவியும் குப்பை: அகற்ற வலியுறுத்தல்
ADDED : மே 25, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள உழவர்சந்தை சுற்றுச்சுவர் அருகே குப்பை குவிந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உழவர்சந்தை அமைந்துள்ளது. இங்கு காய்கறிகள் விற்பனையுடன் தற்போது பூக்கள் விற்பனை நடக்கிறது. தினமும் அழுகிய காய்கறி, காய்ந்த பூக்களை குப்பை தொட்டி இல்லாததால் உழவர்சந்தை சுற்றுச்சுவர் அருகே ரோட்டோரத்தில் கொட்டுகின்றனர்.
இவற்றை தினசரி அகற்றாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே உழவர் சந்தை ரோட்டில் குப்பையை தினசரி அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.