/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் மாலை மாற்றுதல் விழா
/
ராமேஸ்வரத்தில் மாலை மாற்றுதல் விழா
ADDED : ஆக 09, 2024 02:25 AM

ராமேஸ்வரம்:ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகப்படியில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 29ல் ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது.
நேற்று 11ம் திருவிழாவையொட்டி கோயிலில் இருந்து காலை 6:30 மணிக்கு வெள்ளி கமல வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மனும், காலை 11:30 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பிரியாவிடை அம்மனும் புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினர்.
மதியம் 3:20 மணிக்கு தபசு மண்டகப்படி முன்பு சுவாமி, அம்மனுக்கு மாலைமாற்றும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினார். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு 7:40 மணிக்கு அனுமன் சன்னதியில் சுவாமி, அம்மனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று (ஆக.9) இரவு சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.