/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் ஆக.19ல் கருட சேவை

ADDED : ஆக 17, 2024 12:20 AM

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ திருவிழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது.
பரமக்குடியில் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் வடக்கு நோக்கி சேவை சாதிக்கின்றனர். இக்கோயிலில் ஆண்டாள் தனி சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இங்கு மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக அனைத்து உற்ஸவங்களும் ஆண்டு முழுவதும் நடக்கிறது.
ஒவ்வொரு விழாக்களின் போதும் ஏற்படும் ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பரிகார உற்சஸம் நடத்தப்படுகிறது. இதன்படி பவித்ரோத்ஸவம் நேற்று முன்தினம் இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மூலவர் பரமஸ்வாமி என அனைத்து சன்னதிகளிலும் பவித்திர மாலை அணிவிக்கப்பட்டது.
மேலும் தினமும் காலை, மாலை பூஜைகள், நைவேத்தியம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. ஆக.19ல் 5 ம் நாள் விழாவில் சுந்தரராஜ பெருமாள் பெரிய திருவடியான கருட வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.