ADDED : செப் 17, 2024 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : பாம்பன் பள்ளிவாசல் தெரு ஜாகிர் உசேன் 40. மனைவி நுாருல் நஜிரீதின். இவர்களுக்கு இரு பிள்ளைகள். இவர்களுடன் ஜாகிர்உசேன் தாய் ஜும்மா பேகம் 64, வசிக்கிறார்.
நேற்று நுாருல் வீட்டில் சமையல் செய்த போது காஸ் கசிந்து தீ பரவியது. துணிகள் பிரிட்ஜ், கட்டில், மின்விசிறி, எரிந்தது. ஜாகிர் உசேன், மனைவி இரு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேறி தப்பினார்.
ஜும்மா பேகம் கட்டிலில் இருந்து எழுந்திருக்க தாமதம் ஆனதால் முதுகில் தீக்காயம் ஏற்பட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

