/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழே கிடந்த தங்க நகை போலீசில் ஒப்படைப்பு
/
கீழே கிடந்த தங்க நகை போலீசில் ஒப்படைப்பு
ADDED : மார் 11, 2025 04:51 AM

குவியும் பாராட்டு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கமுதி ரோட்டில் துாரி அருகே ரோட்டில் கிடந்த தங்க நெக்லஸை போலீசில் ஒப்படைத்த கமுதியை சேர்ந்த சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் தொழிலாளியை பொதுமக்கள் பாராட்டினர்.
கமுதியை சேர்ந்த செந்தில்குமார் 46. பெரிய உடைப்பங்குளம் அய்யனார் 32, இருவரும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று முதுகுளத்துார் காந்தி சிலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்துவதற்காக வந்துள்ளார்.
பிறகு பணி முடிந்தவுடன் டூவீலரில் கமுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது முதுகுளத்துார் கமுதி ரோடு துாரி பஸ் ஸ்டாப் அருகே கீழே கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்து பார்த்த போது தங்க நகை இருந்தது தெரிய வந்தது.
அதன் பிறகு 4 பவுன் 4 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸை முதுகுளத்துார் புறக்காவல் நிலையத்தில் டி.எஸ்.பி., சண்முகம், இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி முன்னிலையில் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடன் எஸ்.ஐ.,க்கள் சுரேஷ்குமார், முருகன் போலீசார் இருந்தனர். இதையடுத்து செந்தில்குமார், அய்யனார் இருவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.