ADDED : பிப் 27, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; தமிழ்நாடு தடகள கழகம் சார்பில் மாநில அளவில் 20 வயதிற்கு உட்பட்ட இளையோருக்கான தடகளப் போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிப்.,22, 23 ல் நடந்தது. இதில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு கட்டடவியல் துறை மாணவி மதுமிதா குண்டு எறிதலில் 13.10 மீ., வீசி தங்கப்பதக்கம் வென்றார். வட்டு எறிதலில் 38.19 மீ., வீசி வெண்கலப் பதக்கம் வென்றார்.
சாதித்த மதுமிதாவை கல்லுாரித் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, முதல்வர் பெரியசாமி, உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.

