/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் குட்லக் மருத்துவமனை திறப்பு விழா
/
திருவாடானையில் குட்லக் மருத்துவமனை திறப்பு விழா
ADDED : மார் 07, 2025 08:16 AM

திருவாடானை : திருவாடானை பாரதிநகரில் குட்லக் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா நேற்று காலை 11 :00 மணிக்கு நடந்தது. முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் குட்லக் ராஜேந்திரன் அவரது மனைவி மல்லிகா அனைவரையும் வரவேற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவமனையை திறந்து வைத்தனர். சிவகங்கை எம்.பி. கார்த்திக், முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், ராஜ்யசபா எம்.பி. தர்மர், இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் அபுல்ஹசன், மாவட்ட காங்., பொறுப்பாளர் தெய்வேந்திரன், குட்லக் நாகநாதன், குட்லக் மருத்துவமனை டாக்டர் ஆர்.ராகேஷ், ஆர்.ராஜேஸ், ஆர்.ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், சிறப்பு மருத்துவர்கள், நவீன ஆப்பரேஷன் தியேட்டர், லேப்ராஸ்கோபி, ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, இசிஜி, சிடிஜி, நவீன லேப், மருந்தகம், நுரையீரல் சோதனை போன்ற பல வசதிகள் உள்ளன. டாக்டர் ஆர்.ராகேஷ் நன்றி கூறினார்.