ADDED : பிப் 15, 2025 07:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் இருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கை, கொண்டுலாவி சென்ற அரசு பஸ் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடும்போது பள்ளத்தில் இறங்கிய நிலையில் விபத்து தவிர்க்கப்பட்டது.
முதுகுளத்துாரில் இருந்து ஏனாதி, கிடாத்திருக்கை வழியாக கொண்டுலாவிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று கொண்டுலாவி சென்ற அரசு பஸ் கூவர்கூட்டம் அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பின் பொதுமக்கள் உதவியுடன் அரசு பஸ் தள்ளிவிடப்பட்டு மீண்டும் வழக்கம் போல் வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

