/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதியில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும் அரசு பஸ்கள்
/
கமுதியில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும் அரசு பஸ்கள்
கமுதியில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும் அரசு பஸ்கள்
கமுதியில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும் அரசு பஸ்கள்
ADDED : மார் 14, 2025 07:08 AM
கமுதி: கமுதியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்படுவதால் மக்கள் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
கமுதியில் இருந்து இரவு 7:00 மணிக்கு செங்கப்படை, புதுக்கோட்டை தோப்படைப்பட்டி, கோவிலாங்குளம், எருமைகுளம், அரியமங்களம், கரிசல்புலி, இடிவிலகி, பொந்தம்புளி வழியாக பெருநாழிக்கு கடைசி அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். நேற்று எந்த முன்னறிவிப்பும் இன்றி இரவு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கிராமத்திற்கு இயக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் பஸ்சிற்காக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காத்திருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் ஒருசிலர் கிராமத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இரவு நேரத்தில் இயக்கப்படும் கடைசி பஸ்சை எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுத்துவதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக மக்கள் கூறினர்.
எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்சை நிறுத்தாமல் முறையாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
---