ADDED : பிப் 28, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் தலைமையில் நடந்தது. தி.மு.க., நகர் செயலாளர் கண்ணன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் வைரவன், காங்., வட்டார தலைவர் சுப்பிரமணி, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கேசர்கான், கந்தசாமி, பகுர்தீன், அயூப்கான், மதிவாணன், பரக்கத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.