/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப் பள்ளி கட்டுமானம் தாமதம்; மாணவர்களுக்கு சுகாதார கேடு
/
அரசுப் பள்ளி கட்டுமானம் தாமதம்; மாணவர்களுக்கு சுகாதார கேடு
அரசுப் பள்ளி கட்டுமானம் தாமதம்; மாணவர்களுக்கு சுகாதார கேடு
அரசுப் பள்ளி கட்டுமானம் தாமதம்; மாணவர்களுக்கு சுகாதார கேடு
ADDED : ஜூன் 27, 2024 11:38 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் சித்தி விநாயகர் கோயில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 60 மாணவர்கள் படிக்கின்றனர். பழமையான இப்பள்ளி கட்டடத்தில் குழந்தைகள் படிப்பதால் விபரீதம் ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால் 4 மாதம் முன்பு பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டது.
இதுநாள் வரை கட்டுமானப் பணி துவக்காமல் பள்ளி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில் புதிய பள்ளி கட்டடம் கட்டுமானப் பணி முடியும் வரை மாணவர்களை விளையாட்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் படிக்க வைத்தனர்.
ஆனால் இங்கு கழிப்பறை, குடிநீர் வசதி எதுவும் இல்லாததால் மாணவர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை செல்கின்றனர். இதனால் அப்பகுதி சுகாதாரக் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கழிப்பறை வசதியின்றி பாதிக்கப்படுகின்றனர்.
இச்சூழலில் பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன் ஏற்பாட்டில் தற்காலிக பள்ளி அருகில் புதிய கழிப்பறை கட்டடம் அமைக்கப்படுகிறது. எனவே தற்காலிக பள்ளிக்கூடம் அருகில் வளர்ந்துள்ள முள்மரங்களை அகற்றி சுகாதாரம் பராமரிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

