/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல்
/
அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல்
அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல்
அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல்
ADDED : பிப் 24, 2025 02:53 AM
ராமநாதபுரம்: தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் சமஸ்கிருதம், அரபி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பட்ஜெட்டில் நிதி இல்லாததால் பிப்., சம்பளம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிற மொழிகளை பயிற்றுவிக்க சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளிகளில் சமஸ்கிருதம், அரபிக்மொழி உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் இம் மொழிகளை கற்று கொடுக்க பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு (எப்.எச்.ஆர்.எம்.,) மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பிப்., மாதத்திற்கான சம்பள பில் பிப்.15ல் இருந்தே போட துவங்குவர். சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் நிதி இல்லாததால் பிப்., மாதத்திற்கான சம்பளம் போட முடியாத நிலையுள்ளது.
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் பிப்., சம்பளம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர். பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.