/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அதிகாரிகள் வாக்குவாதம்
/
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அதிகாரிகள் வாக்குவாதம்
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அதிகாரிகள் வாக்குவாதம்
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அதிகாரிகள் வாக்குவாதம்
ADDED : ஆக 09, 2024 10:43 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்ற தமிழ்ப்புதல்வன் திட்ட துவக்க விழாவில் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று பேராசிரியர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி அரங்கில் தமிழ்ப்புதல்வன் திட்ட துவக்க விழா நடந்தது.
அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா, பரமக்குடி முருகேசன், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்புதல்வன் திட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்தியன் வங்கி மூலம் டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் 5 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கினார். அந்த 5 பேரும் தனியார் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள். பயன் பெற்றவர்களை கருத்துக்கூற அழைக்கப்பட்ட மாணவர்களும் தனியார் கல்லுாரி மாணவர்களாக இருந்தனர்.
இதையடுத்து விழா முடிவில் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் அரசுக் கல்லுாரிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளோம். அரசு கல்லுாரி மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்காமல் தனியார் கல்லுாரிக்கு மட்டுமே எப்படி முக்கியத்துவம் அளிக்கலாம் என அரசு கல்லுாரி பேராசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேடையில் 10 மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்க திட்டமிட்டிருந்தோம். அமைச்சர் 5 பேருக்கு மட்டுமே வழங்கியதால் அரசு கல்லுாரி மாணவர்கள் விடுபட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதன் பின் அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கலைந்து சென்றனர்.

