/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் பட்டறையை போடும் அரசு டவுன் பஸ்கள்

ADDED : ஜூன் 27, 2024 11:41 PM

கடலாடி : முதுகுளத்துாரில் இருந்து கடலாடி, பேரையூர் மற்றும் சாயல்குடி வழியாக இயக்கப்படும் வழித்தடம் எண் 9 அரசு டவுன் பஸ் நேற்று பஞ்சரானதால் பாதி வழியில் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ்சில் சென்றனர்.
கடலாடி தேவர் நகர் அருகே நேற்று மதியம் 12:00 மணிக்கு முதுகுளத்துாரில் இருந்து 25 பயணிகளுடன் வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராத விதமாக பஞ்சரானது. இதனால் ரோட்டோரம் நிறுத்தப்பட்டு டவுன் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரால் மாற்று டயர் பொருத்தப்பட்டு மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டது.
பஸ் பயணிகள் கூறியதாவது: முதுகுளத்துார் டெப்போவில் இருந்து இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பாக ஒழுகும் பஸ்களை கண்டறிந்து அவற்றில் கூரை பூச்சுக்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பஸ்களில் தனியார் விளம்பர நிறுவனங்களுக்கு பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் கொடுக்கும் முக்கியத்துவத்தை உரிய முறையில் பராமரிப்பிற்கும் வழங்க வேண்டும் என்றனர்.