/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
47 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; மக்கள் ஆலோசனை வழங்க அறிவுரை
/
47 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; மக்கள் ஆலோசனை வழங்க அறிவுரை
47 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; மக்கள் ஆலோசனை வழங்க அறிவுரை
47 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; மக்கள் ஆலோசனை வழங்க அறிவுரை
ADDED : ஆக 12, 2024 11:57 PM
திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் சுதந்திர தினமான ஆக.15ல் 47 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது. திருவாடானை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறியதாவது:
இந்த ஒன்றியத்தில் உள்ள 47 கிராம ஊராட்சிகளிலும் ஆக., 15ல் கிராம சபை கூட்டம் நடக்கிறது. அன்று காலை 11:00 மணிக்கு துவங்கி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைக்கப்படும்.
பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள், ஆன்லைன் மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், ஜல் ஜீவன் திட்டம், நுாறு நாள் வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கிராம சபைக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று கிராம வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என்றனர்.