/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வனத்திற்கு வெளியே பசுமைவிழிப்புணர்வு கருத்தரங்கம்
/
வனத்திற்கு வெளியே பசுமைவிழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : மார் 06, 2025 03:12 AM
ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் குயவன்குடியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பசுமையை விரிவுபடுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
மாவட்ட வனஅலுவலர் ேஹமலதா தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் பல்லுயிர் பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தில் நகர், கிராமங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுப்பது.
மரக்கன்று நடவு செய்வதன் பலன்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் 250 செம்மரக்கன்றுகள் நட்டனர். வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள், வனப்பணியாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.