/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் வீதியில் பசுமை பந்தல்
/
ராமேஸ்வரம் கோயில் வீதியில் பசுமை பந்தல்
ADDED : மே 09, 2024 02:42 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்க நகராட்சி நிர்வாகம் பசுமை பந்தல் அமைத்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் ரத வீதியில் நடந்து சென்று கோயிலில் நீராடி தரிசிக்கின்றனர்.
தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் ரதவீதியில் நடந்து செல்ல பக்தர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் கோயில் கிழக்கு ரத வீதியில் 200 மீ., நீளத்தில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நீராடி தரிசனம் செய்து திரும்பும் பக்தர்களுக்கு இப்பந்தல் வெப்பத்தில் இருந்து ஆறுதல் அளிக்கிறது.