ADDED : ஜூன் 19, 2026 10:12 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வழிப்பறி வழக்கில் கைதான இரு வாலிபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முனீஸ்வரன் 24, கடந்த மே 17 ல் எம்.எஸ்.கே.நகருக்கு தனது நண்பரை பார்க்க சென்றார். வெளிப்பட்டிணம் அருகே சென்ற போது டூவீலரில் வந்த இருவர் முனீஸ்வரனிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் அலைபேசியை பறித்து சென்றனர். இந்த வழக்கில் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ஜெமினிராஜ் 32, எம்.எஸ்.கே.நகர் சேர்ந்த விக்னேஷ் 33, ஆகிய இருவரை ராமநாதபுரம் நகர் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரைத்தார். இதையடுத்து சிறையில் அடைக்க கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
––
