/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அனுமார் கோயிலில் குரு பெயர்ச்சி விழா யாகம்
/
பரமக்குடி அனுமார் கோயிலில் குரு பெயர்ச்சி விழா யாகம்
பரமக்குடி அனுமார் கோயிலில் குரு பெயர்ச்சி விழா யாகம்
பரமக்குடி அனுமார் கோயிலில் குரு பெயர்ச்சி விழா யாகம்
ADDED : மே 02, 2024 05:14 AM

பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் 26ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி யாகம் நடந்தது.
குரு பகவான் கார்த்திகை 1ம் பாதத்தில் மேஷ ராசியில் இருந்து கார்த்திகை 2ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு மாலை 5:28 மணிக்கு பெயற்சியானார்.
தொடர்ந்து குருஜி ராம்சரவணன் தலைமையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்களை குறிக்கும் வகையில் கும்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பரிகார பூஜை நடந்தது.
அப்போது மகா குபேர வேள்வி யாகம், ராஜசூய யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 12 ராசிகாரர்களும் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினர். விழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* இதே போல் பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்கள், மற்ற அனைத்து கோயில்களிலும் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.