/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'மனைவியுடன் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் நண்பரை கொன்றேன்' கைதான வாலிபர் வாக்குமூலம்
/
'மனைவியுடன் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் நண்பரை கொன்றேன்' கைதான வாலிபர் வாக்குமூலம்
'மனைவியுடன் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் நண்பரை கொன்றேன்' கைதான வாலிபர் வாக்குமூலம்
'மனைவியுடன் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் நண்பரை கொன்றேன்' கைதான வாலிபர் வாக்குமூலம்
ADDED : ஜூலை 03, 2024 02:10 AM
திருவாடானை:''மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கொலை செய்தேன்,'' என, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் ஆட்டுக்கல்லை தலையில் துாக்கி போட்டு நண்பரை கொன்ற வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.
நம்புதாளை மேற்குத்தெருவைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர் 26. அதே தெருவைச் சேர்ந்தவர் மிர்சான் அலி 38. இருவரும் நண்பர்கள். மிர்சான் அலி மனைவி செய்யது அலிபாத்திமா 34. இவருக்கும், முகமது அபுபக்கருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த மிர்சான் அலி ஜூன் 30 இரவு ஆட்டுக்கல்லை துாக்கி தலையில் போட்டு முகமது அபுபக்கரை கொலை செய்தார்.
எஸ்.ஐ., ஆசைகுமார் மற்றும் போலீசார் மிர்சான் அலியை கைது செய்தார்.
மிர்சான் அலி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: எனக்கு 19 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நானும், முகமது அபுபக்கரும் நண்பர்கள். வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில் எனது மனைவிக்கும் முகமது அபுபக்கருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதை அறிந்து மனைவியை கண்டித்தேன். அவர் என்னை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று இரவு நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன்.
அப்போது முகமது அபுபக்கர் மது வாங்கி வந்தார். இருவரும் மது அருந்தினோம். மனைவியுடன் ஏற்பட்ட காதலை கைவிடுமாறு சொன்னேன். அதற்கு முகமது அபுபக்கர் உனது மனைவி என்னுடன் வாழ விரும்புகிறாள் என்று கூறினார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போதை தலைக்கேறி முகமது அபுபக்கர் அயர்ந்து துாங்கிவிட்டார். அவரை கொலை செய்ய திட்டமிட்டு அருகில் இருந்த ஆட்டுக்கல்லை தலையில் துாக்கி போட்டு கொலை செய்தேன் என கூறியுள்ளார்.