ADDED : ஜூலை 25, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே துத்தியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா 39. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு கருப்பையா பலியானார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

