/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் கடற்கரையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
தேவிபட்டினம் கடற்கரையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
தேவிபட்டினம் கடற்கரையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
தேவிபட்டினம் கடற்கரையில் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : மார் 06, 2025 03:10 AM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் கடற்கரை பகுதிகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தேவிபட்டினம் குடியிருப்பு பகுதி, வீடுகள் மற்றும் தெருக்களில் தேங்கும் குப்பை அதிகளவில் தேவிபட்டினம் கடற்கரைப் பகுதிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், கடற்கரையோரங்களில் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் கடற்கரை பகுதி குடியிருப்பு வாசிகள் சுகாதார சீர்கேட்டால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். கடற்கரை ஓரத்தில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கடற்கரையோரம் தேங்கியுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.