/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் சீதா தீர்த்தத்தில் பிளாஸ்டிக் கழிவு குவியல்
/
ராமேஸ்வரம் சீதா தீர்த்தத்தில் பிளாஸ்டிக் கழிவு குவியல்
ராமேஸ்வரம் சீதா தீர்த்தத்தில் பிளாஸ்டிக் கழிவு குவியல்
ராமேஸ்வரம் சீதா தீர்த்தத்தில் பிளாஸ்டிக் கழிவு குவியல்
ADDED : ஜூலை 04, 2024 01:06 AM
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால் தீர்த்தத்தின் புனிதம் சீரழிகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான சீதா தீர்த்த குளம், கோயிலில் இருந்து ஒரு கி.மீ.,ல் உள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்கு வெளியில் உள்ள சீதா தீர்த்தம், ராமர், லட்சுமணர் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவது வழக்கம்.
இதில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சீதா தீர்த்தம் உள்ளதால் நீராடும் பக்தர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதனால் சீதா தீர்த்தம் சுற்றிலும் தடுப்புச் சுவர் எழுப்பியதால் பக்தர்கள் நீராட முடியாமல் போனது. இருப்பினும் தீர்த்தத்தை பக்தர்கள் பார்த்து வணங்கிச் சென்றனர்.
காலப்போக்கில் இத்தீர்த்தத்தை பராமரிக்காமல் இதனருகில் உள்ள தங்கும் விடுதிகள், வீடுகள், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்களை தீர்த்த களத்தில் வீசுகின்றனர்.
இதனால் புனித தீர்த்த குளம் குப்பைகூழமாக மாறியது. எனவே தீர்த்த குளத்தை சுத்தம் செய்து குப்பை வீசுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.