/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த மழை ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
/
ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த மழை ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த மழை ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த மழை ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
ADDED : மே 21, 2024 05:50 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நேற்று கனமழை பெய்ததால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
கோடை மழை தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை ராமேஸ்வரம் பகுதியில் கனமழை பெய்தது. இதன் பின் சாரல் நீடித்ததால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு ரோட்டில் 2 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. கோயில் கிழக்கு, தெற்கு ரத வீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மக்கள் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பாம்பனில் 130 மி.மீ., ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் தலா 90 மி.மீ., மழை பெய்து தீவை 'குளுகுளு' பகுதியாக மாற்றியது. சுட்டெரித்த வெயிலுக்கு கோடை மழை இதமாகவும், குளிர் காலத்தில் பெய்த மழையை போல் உள்ளது என மக்கள் தெரிவித்தனர்.